என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவை அரசு மருத்துவமனை"
கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. தொழிலாளி. இவரது மனைவி சிந்து (வயது 26). இவர்களுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதையடுத்து சிந்து கர்ப்பமானார். 3-வது மாதம் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். டாக்டர்கள் ஸ்கேன் செய்த போது அவருக்கு 3 கருக்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
பின்னர் டாக்டர்கள் அவருக்கு சத்து மாத்திரைகள் வழங்கி உணவு சாப்பிடும் முறை குறித்து ஆலோசனை கூறினர். இதைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான சிந்து கடந்த 2-ந் தேதி பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவ வலியால் துடித்த சிந்துவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக 4 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், நேற்று சிந்துவுக்கு சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர்.
காலை 9.23 மணியளவில் சிந்துவுக்கு அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
அதில், 2 பெண் குழந்தைகள் தலா 1¾ கிலோ எடையும், ஒரு குழந்தை 1½ கிலோ எடையுடன் இருந்தது. தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் தற்போது 3 குழந்தைகள் பிறந்து உள்ளது. அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
இது குறித்து அந்த குழந்தைகளின் தந்தை சுரேஷ்பாபு கூறும்போது,
மகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மிகவும் ஏழையான நான் 3 பெண் குழந்தைகளையும் எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை. எனவே அரசு எனக்கு உதவ வேண்டும் என்றார். #tamilnews
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறை சார்பில் பாலமநல்லூர் கிராமத்துக்கு மருத்துவ குழு அனுப்பபட்டது.
மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 30 துப்புறவு பணியாளர்கள் மூலமாக கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு கரூரை சேர்ந்த 69 வயது முதியவர், ஈரோட்டை சேர்ந்த 9 வயது சிறுமி ஆகிய 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
வைரஸ் காய்ச்சலுக்கு 35 பேரும் என மொத்தம் 37 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினசரி ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தொடர்ந்து காய்ச்சல் ,சளி,இருமலுடன் இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இவர்களின் யாருக்காவது, டெங்கு, பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #swineflu
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 30). இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
செல்வம் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயிலில் இருந்த இவர் கடந்த 6-ந் தேதி கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அங்கு இருந்த செல்வம் மீண்டும் கையை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு வைத்து அவருக்கு கடந்த 2 நாட்களாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வத்துக்கு பாதுகாப்பாக சரவணகுமார் என்ற போலீஸ்காரர் இருந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் போலீஸ்காரரிடம் செல்வம் கழிவறைக்கு செல்வ வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து போலீஸ்காரர் சரவணகுமார் கழிவறை செல்ல செல்வத்தை அனுமதித்தார். செல்வம் கழிவறைக்கு சென்று 15 நிமிடங்கள் ஆகியும் அவர் திரும்பிவரவில்லை.
இதனால் போலீஸ்காரர் கழிவறை கதவை தட்டினார். ஆனால் கதவை செல்வம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் கதவை உடைத்து கழிவறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது கழிவறையில் செல்வம் இல்லை. கழிவறைக்கு சென்ற செல்வம் அங்கு இருந்த ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர் சரவணகுமார் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிறை அதிகாரிகள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிறைக்கைதி செல்வத்தை தேடி வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி போலீஸ்காரரை ஏமாற்றி தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
கோவை, ஆக.25-
தே.மு.தி.க. பொது செய லாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
இதையொட்டி புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை, புனித அந்தோ ணியார் ஆலயத்தில் பிரார்த் தனை, தொழிற்சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடி யேற்று விழா, அன்ன தானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடந்தது.
தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப் பட்டது. மேலும் உள்நோயா ளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்கினர். பின்னர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி னர். இதைத்தொடர்ந்து 40-வது வார்டில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந் தது. நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு, அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்த குமார், வனிதா துரை,
செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்து குமார், பன்னீர்செல்வம், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
இன்று மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்